Homeசெய்திகள்தமிழ்நாடு10-ம் பொதுத்தேர்வில் தோல்வி- மாணவன் தூக்கிட்டு தற்கொலை

10-ம் பொதுத்தேர்வில் தோல்வி- மாணவன் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

10-ம் பொதுத்தேர்வில் தோல்வி- மாணவன் தூக்கிட்டு தற்கொலை

குளித்தலை அருகே சின்னமலைப்பட்டியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicide - தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னமலை பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி மகன் சிவா (15). இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் சிவா தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

we-r-hiring

இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ