spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் - தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் – தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்

-

- Advertisement -

இலங்கை சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 13 மீனவர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வரவழைக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனா்.இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் - தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினா்மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகு மூலம் 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் படகுடன் 14 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அன்று 13 மீனவர்களை மட்டும் இலங்கை நீதிபதி விடுதலை செய்தார். விசைப்படகின் ஓட்டுநரான ஒரு மீனவருக்கு மட்டும் ஒன்பது மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

we-r-hiring

விடுதலையான 13 மீனவர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, கொழும்புவில் உள்ள வெளிச் சிறா முகாமில் 13 மீனவர்களும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்பு அவசர கால கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, கொழும்புவில் இருந்து இண்டிகோ விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த 13 மீனவர்கள் அனைவருக்கும் சுங்க சோதனை, குடியுரிமை சோதனை என அனைத்து சோதனைகளையும் மேற்கொண்ட பின்பு 13 மீனவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். வெளியே வந்த மீனவர்கள் அனைவரையும் மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்! விஜயின் டெப்பாசிட் காலி! அய்யநாதன் நேர்காணல்!

MUST READ