spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு ஆணை!

150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு ஆணை!

-

- Advertisement -

 

150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு ஆணை!

we-r-hiring

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 150 புதிய தாழ்தளப் பேருந்துகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் புஷ்பா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்!

இது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் பேருந்து சேவையைப் பூர்த்திச் செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தும் வகையிலும் முதலமைச்சரின் உத்தரவின் படி, 150 புதிய தாழ்தள பேருந்துகள் 139 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திற்கு 26 பேருந்துகள், சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகள், கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு 38 பேருந்துகள், மதுரைப் போக்குவரத்துக் கழகத்திற்கு 33 பேருந்துகள், நெல்லை போக்குவரத்துக் கழகத்திற்கு 17 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன.

சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் பேருந்துகளில் ஏறி இறங்க முடியும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

MUST READ