Homeசெய்திகள்தமிழ்நாடு"3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம்...

“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

தமிழக உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா

வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அடுத்த 3 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம்.

வெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 19) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், அதை ஒட்டிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் ஏப்ரல் 23- ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ