spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு3500 சவரன் நகைகள் துணிகர மோசடி - போலீசார் விசாரணை

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை

-

- Advertisement -

3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும்  கும்பகோணம், நாகப்பட்டினம், சிதம்பரம் என அனைத்து ஊர்களிலும் சுமார் 3500 சவரன் நகைக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.

we-r-hiring

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்த புகாரை அழித்தவர் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பரகத் நிஷா அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீனிவாசபுரத்தை சேர்ந்த பாத்திமா நாச்சியார் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார். அவர் அவரிடம் கூறியது 10 சவரன் நகை அளித்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதனை நம்பி பரகத் நிஷா கடந்த 2011 ஆம் ஆண்டு 10 பவுன் நகை கொடுத்துள்ளார். அதே போல 15,000 ஆயிரம் பணம் தொடர்ந்து ஒரு மூன்று மாத காலம் கொடுத்துள்ளார். அதை நம்பி இவரை போன்று அவருக்கு நெருங்கிய உறவுகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பர்கத் நிஷா அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று இதுபோல நபர்களை ஒவ்வொரு வராக பிடித்து சங்கிலித் தொடர் போல அந்த பாத்திமா நாச்சியார் என்பவர் ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் 500 பவுன், 800 பவுன், 1000 பவுன் என மொத்தம் 3500 சவரன் நகைகளை மோசடி செய்து தலை மறைவாகி விட்டார்.

தற்பொழுது பரகத் நிஷா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்புகாரின் பெயரில் சீர்காழி காவல் நிலையத்தில் பாத்திமா நாச்சியார் என்பவரை அழைத்து வந்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை செய்வது அறிந்து பாத்திமா நாச்சியாரிடம் ஏமாற்றமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நபர் வந்தனர். அவர்களில்  அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் 500 பவுன் என கணவருக்கு தெரியாமல் மாதம் 15,000 வரும் என நம்பிக்கையில் அவர்கள் கொடுத்துள்ளனர். தற்போது கணவர்மார்களுக்கு தெரிந்தவுடன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த கணவன்மார்களும் சேர்ந்து வந்துள்ளனர். தற்போது வந்துள்ள அனைவருமே சொல்வது என்னவென்றால் கணவருக்கு தெரியாமல் கொடுத்தோம். மாதம் 15 ஆயிரம் ரூபாய் தருவார்கள் என நம்பி ஒவ்வொருவரும் 500 பவுன், 800 பவுன் என அவர்கள் உறவினர்களும் சேர்த்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

சீர்காழி காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் சுமார் 3700 பவுன் நகை தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்ந்து பலதரப்பு மக்கள் இன்னும் தெரியாமல் இருப்பதால் பல கிலோ கணக்கில் நகைகள் மோசடி செய்திருக்ககூடும் என்று தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ