Homeசெய்திகள்தமிழ்நாடு"நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

"நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென் மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

தென்காசியில் 60% மழையும், தூத்துக்குடியில் 80% மழையும் இயல்பை விட கூடுதல் மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் தொடர்கிறது. வழக்கமாக வளிமண்டல சுழற்சியால் இவ்வளவு மழை பதிவாகாது. நாள் முழுவதும் மழை பெய்துள்ளது; இதை மேகவெடிப்பு எனக் கூற முடியாது.

குளமாக மாறிய நெல்லை பேருந்து நிலையம்!

ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ.க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என அர்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ