

தமிழகத்தில் இன்று (டிச.01) ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசோக் செல்வனின் சபா நாயகன் பட ட்ரைலர் வெளியானது
வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று (டிச.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை (டிச.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 03- ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 07- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…
டிசம்பர் 03, 04 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


