Homeசெய்திகள்தமிழ்நாடுமூடப்படும் டாஸ்மாக் கடைகள்- ஒருவாரத்தில் பட்டியல்

மூடப்படும் டாஸ்மாக் கடைகள்- ஒருவாரத்தில் பட்டியல்

-

மூடப்படும் டாஸ்மாக் கடைகள்- ஒருவாரத்தில் பட்டியல்

தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகள் எவை என்பது குறித்த பட்டியல் ஒருவாரத்தில் வெளியாவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tasmac tamilnadu

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,289 மதுபான கடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகள் எவை என்பது குறித்த பட்டியல் ஒருவாரத்தில் வெளியாவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு அருகே உள்ளா 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.

MUST READ