Homeசெய்திகள்தமிழ்நாடுபிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்

பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்

-

- Advertisement -

சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம், 2 அடுக்கு பேஸ்க்மெண்ட் அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1,100 ஆகும்.

1,933 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பொதுமக்களுக்கு எளிதான, சீரான அணுகும் வசதி – பல்வேறு நுழைவாயில்கள் வழீயாக உள்நுழையும் வசதிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸிக்கான ஒருங்கிணைந்த வசதிகளை கொண்டிருக்கும். இப்பேருந்து நிலையம் சுமார் 470 கார், 800 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, மின்சார பேருந்துகளுக்கான மின்னேற்றம் செய்யும் (charging), கோட்டை புறநகர் ரயில் நிலையத்துடன் இணைப்பு, என்எஸ்சி போஸ் சாலையை கடப்பதற்கான வசதிகளை கொண்டிருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 

MUST READ