காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை முதல்வா் திறந்து வைத்தாா். இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 840 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில் மறைமுகமாக 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், “ 1003 கோடி மதிப்பீட்டில் முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பை தரும் கண்ணாடி தொழிற்சாலை இப்போது அதிகம் முதலீடு வருவதற்கு உறுதி செய்து கொடுத்திருக்கிறார்கள். முதலீடுகளை இன்னும் வளர்ந்து கொண்டு வரவேண்டும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நான் விரும்புவதாகவும், அதிநவீன தொழில்நுட்பம், தரம் என்பதை குறிக்கோளாகவும் உள்ள இந்த நிறுவனம் தமிழ்நாட்டு, இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதையும் குறிக்கோளாக சேர்த்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திராவிட மாடல் அரசு எந்த அளவுக்கு வேகமாக செயல்பட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு இந்த நிறுவனமே ஒரு சாட்சியாக உள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஜூன்-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 17 மாதங்களில் இந்த நிறுவனம் உற்பத்தியை துவங்கி உள்ளது. திராவிட மாடலின் உழைப்பினால் தான் இது போன்ற திட்டங்களை கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்து ஒப்பந்தம் போடப்பட்டு, அதில் 80 சதவீத திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த வேகமும், வெளிப்படும் தன்மையையும் தான் உலக நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லும் மெசேஜாக அமைந்துள்ளது.
பல உலக நிறுவனங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதினால் தான் கடந்த 4 ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ், GCC ஆர்.என்.டி போன்ற துறைகளில் மகத்தான வளர்ச்சியை சாதித்துள்ளோம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 14.65 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே நம்பர் ஒன்றாக உள்ளோம். ஒட்டுமொத்த இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்பது சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளோம் இது வெறும் புள்ளி விவரம் மட்டுமல்ல தமிழ்நாடு தான் எலக்ட்ரானிக் கேப்பிட்டல் என்று சொல்லும் உண்மை. இது இதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஒன்றிய அரசுடன் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை பக்கத்தில் 440 கோடி முதலீட்டில் மின்னுனு தயாரிப்பு தொகுப்பு துவக்கப்பட உள்ளது. இதில் சூரிய ஒளி சார்ந்த கதிரியக்க சோதனை மையம், மின்சாதனங்கள் சோதனை மையம், மின்னணு சாதன ஆய்வகம், டிசிபி வடிவமைப்பு, திறன் மேம்பாட்டு மையம், தொழிலாளர் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் முக்கிய மையமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். டிசைனிங் முதல் ப்ரொடக்ஷன் வரை முழு மதிப்பு செயலையும் தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு இந்த திட்டமாயுள்ளது. ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிவித்ததும் திராவிட மாடல் அரசு தான் மாநிலத்திற்கான மின்னணு உதிரி பாகம் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 24 விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் 40% முதலீடுகளும் தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்பட உள்ளது. உற்பத்தி வடிவமைப்பு உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்படி தொலைநோக்கு சிந்தனையோடு பல திட்டங்களை உருவாக்கி தொழில்முனைவிற்கு சிந்தனையை உருவாக்கி உள்ளதால் தான் முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டை நோக்கி ஆர்வமாக வருகிறனர். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் திட்டங்களைப் பொறுத்தவரையில் காஞ்சிபுரம்,ஓசூர் கோவை, திருச்சி, திருநெல்வேலி எல்லா பகுதிகளிலும் முன்னணி நிறுவனங்களின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது” என்று உரையாற்றினாா்.
1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…


