Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பின் 9 வது சர்வதேச மாநாடு தொடக்கம்

சென்னையில் ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பின் 9 வது சர்வதேச மாநாடு தொடக்கம்

-

- Advertisement -

அரிய கலைகளை மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பின் 9 வது சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது.

அரிய கலைகளை மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பின் 9 வது சர்வதேச மாநாடு  இன்று தொடங்குகிறது.

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் மே 20 ம் தேதி தொடங்கி 26 ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில்  முதல் நாளான இன்று மாலை இசைஞானி இளையராஜா முறைப்படி மாநாட்டை தொடங்கிவைக்கவுள்ளார்.

இதற்கு முன்னதாக நாதஸ்வர இசை கலைஞர்  பத்மஸ்ரீ விருது பெற்ற சேஷம்பட்டி சிவலிங்கம் இசையுடன் கலை நிகழ்வுகள் தொடங்கப்படவுள்ளது. இவ் அமைப்பு இந்தியா முழுவதும் பள்ளிகளில் தொடர்ந்து கலை பண்பாட்டை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

நாதஸ்வர இசை கலைஞர்  பத்மஸ்ரீ விருது பெற்ற சேஷம்பட்டி சிவலிங்கம்

இந்த நிலையில் ஒன்பதாவது சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும், இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நேரடியாக பங்கேற்று தமிழ்நாட்டினுடைய கலைகளையும் அதேபோன்று கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட கலை பண்பாடு சார்ந்த நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பின்  தமிழக ஒருங்கிணைப்பாளர் நித்தியஸ்ரீ கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழு நாட்கள் நடைபெறும் நிகழ்வில், 1300 முக்கியமான பிரபலங்கள், கலைஞர்கள், இசை நிகழ்ச்சிகள், யோகா உள்பட பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளதாக ஸ்பிக் மெக்காய் (SPIC MACAY) அமைப்பு தெரிவித்துள்ளது.

MUST READ