Homeசெய்திகள்தமிழ்நாடுமழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!

மழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!

-

- Advertisement -

தாம்பரத்தில் சுவாரசியம் மழைக்கு ஆட்டோவிற்கு போர்வை போர்த்திய ஆட்டோ ஓட்டுனர், மகள் மறந்து வைத்த 9 சவரன் நகை ரெயில் நிலையம் அருகே கீழே விழுந்த நிலையில் சக ஆட்டோ ஒட்டுனர் கண்டெடுத்து போலீசார் மூலம் வழங்கி பாரட்டை பெற்றார். மழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த 9 சவரன் நகையை கடப்பேரியை சேர்ந்த கோட்டிஸ்வரன்(48) என்பவர் கண்டெடுத்தார், அதே வேளையில் சக ஆட்டோ ஓட்டுனர் தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சகுல் ஹமீது ஆட்டோவிற்கு  நேற்று காலை பெய்த மழை காரணமாக வீட்டின் இருந்த போர்வையில் அவரது மகள் நஸ்ரின் பானு என்பவர் 9 சவரன் செயினை போர்வை மேல் வைத்து இருந்த நிலையில் அந்த போர்வையை  ஆட்டோவின் மீது போர்த்திய நிலையில் ரெயில் நிலையம்  முன்பாக கீழே விழுந்துள்ளது தெரிய வந்தது,

இதனால் கோட்டிஸ்வரன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய முறையில் விசாரணை உண்மை தெரிய வர நகை உரிமையாளர் சாகுல் அமீது மற்றும் அவரது மகள் நஸ்ரின்பானுவிடம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர், அதே வேளையில் நகையை கண்டெடுத்த கோட்டிஸ்வரனை வெகுவாக பாராட்டினார்கள்.

கட்சத்தீவு மீட்பு… அதிமுக – பாஜகவின் கபட நாடகங்கள்: ஒரே ஒரு கடிதமாவது எழுதினாரா மோடி..?

MUST READ