அதிமுக முன்னாண் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்தாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.
அதிமுக முன்னால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்தாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது. 2016 -2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேவூர் ராமச்சந்திரன் இருந்துள்ளாா். அப்போது வருமானத்தை விட 125% அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ் குமார், விஜயகுமார் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காலை முதலே அவரது வீட்டில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!