- Advertisement -

பெரியகுளம் (தேனி மாவட்டம்) அழகர்சாமிபுரம் கண்மாய்கரை பகுதி தோட்டத்து வீட்டில் முகமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. வனத்துறையினருக்கு உதவிடும் தேனியில் பாம்பு பிடிக்கும் கண்ணன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்ணன் மின்விசிறியில் ஆக்ரோஷமாக படம் எடுத்த 6 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கில் போட்டு சோத்துப்பாறை வனப்பகுதிக்குள் விட்டிருக்கிறார்.
