Homeசெய்திகள்தமிழ்நாடுபொத்தேரியில் 4வது மாடியிலிருந்து குதித்து தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை

பொத்தேரியில் 4வது மாடியிலிருந்து குதித்து தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை

-

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த கொண்டா சீனுவாச நிக்கில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.டெக் சி.எஸ்.சி இறுதியாண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த 31ம் தேதி அதிகாலை பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலிசார் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான கஞ்சா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

potheri

இது தொடர்பாக கொண்டா சீனுவாச நிக்கில் உள்ளிட்ட 18 பேரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் நீதிமன்ற ஜாமீனில் அவர்களை விடுவித்தனர். இதனிடையே, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தனியார் கல்லுரி நிர்வாகத்தினர், கொண்டா சீனுவாச நிக்கிலின் பெற்றோரை நேரில் வரவழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

Dead

இதனால் பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதிய சீனுவாச நிக்கில் நேற்றிரவு தான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த சீனுவாச நிக்கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ