spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பெண் கதறல்... சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை...

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பெண் கதறல்… சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை பேருந்தில் திருட்டு!

-

- Advertisement -
kadalkanni

அரசு பேருந்தில் நிலையத்தில் பெண் கதறல்... சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை திருட்டு!

30 நிமிட நேர அரசு பேருந்து பயணத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை பறிகொடுத்த பரிதாப பெண்மணி தன்னுடைய குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் கதறல். ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நசரத் பேட்டை பகுதியில் வசிப்பவர் ஷகிலா ஜெய்சங்கர்(32). இவர் தன்னுடைய உறவினரின் விசேஷத்திற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த விட்டிலாபுரம் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அதனை முன்னிட்டு இன்று காலை சுமார் 10 மணி அளவில் நசரத்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் தன்னுடைய மூன்று வயது ஆண் குழந்தையுடன் கைப்பையை வைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்தார். அந்த வழியே வந்த அரசு பேருந்தில் ஏறி டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உட்கார இடம் கிடைக்காமல் தன்னுடைய குழந்தையை தோளில் சுமந்துவாறு நின்று கொண்டே பயணம் செய்தார்.

சீட்டில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி குழந்தையை தாருங்கள் நான் வைத்துக் கொள்கின்றேன் எனக் கேட்டபோது கைப்பையை மட்டும் கொடுத்துவிட்டு நின்றவாறே ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் வந்தடைந்தார்.

தன்னுடைய கைப்பையை அந்த பெண்மணியிடம் பெற்றுக் கொண்டு நன்றி கூறிவிட்டு குழந்தையுடன் கீழே இறங்கி செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஷகிலா தன்னுடைய கைப்பை திறந்திருந்ததை கண்டு திடுக்கிட்டு கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, கைப்பையில் வைத்திருந்த சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6சவரன் தங்க நகை மாயமானது கண்டு அதிர்ந்து போனார். பேருந்தை விட்டு இறங்கி கைப்பையை வைத்திருந்த பெண்மணியை தேடிப் பார்த்த போது அந்தப் பெண்மணி கண்ணில் படாததால் உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சகிலா ஜெய்சங்கரை அழைத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

30 நிமிட நேர அரசு பேருந்து பயணத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை பறிகொடுத்த பரிதாப பெண்மணி தன்னுடைய குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் கதறியது குறிப்பிடத்தக்கது.

சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் அரசு பேருந்தில் ஒரு பெண்மணியிடமிருந்து நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை துணிச்சலாக திருடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் , பெருமளவு குற்ற செயல்களை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் மிகவும் வேதனையோடு கூறி வருகின்றனர்.

நெல்லை: நீட் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை – பெற்றோர் கதறல்..

MUST READ