spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1  முதல் தொடக்கம் – பள்ளிக் கல்விதுறை உத்தரவு

2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1  முதல் தொடக்கம் – பள்ளிக் கல்விதுறை உத்தரவு

-

- Advertisement -

2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச்.1  முதல் தொடங்கிட அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, அத்துடன் அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளாா்.2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1  முதல் தொடக்கம் – பள்ளிக் கல்விதுறை உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கையை கொண்டாட்டம் இந்தாண்டும் நடத்தப்படவுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

we-r-hiring

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும். 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்”, என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல் மார்ச் ஒன்றாம் தேதி மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் தொடங்கியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் கல்வி ஆண்டு தொடங்கும் முன் கோடை விடுமுறைக்கு முன்னரே அரசு பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர். அதன்படி இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை

MUST READ