
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் யுத்தம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை உரிமைக் காக்கும் யுத்தம் தொடரும். எம்.ஜி.ஆர். வகுத்த அ.தி.மு.க. விதிகளை கல் நெஞ்சம் படைத்தவர்கள் ரத்துசிஜி செய்துள்ளனர். சசிகலாவைத் தரக்குறைவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்தவர்” என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.