Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

-

- Advertisement -

 

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
Photo: ADMK

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை (செப்.25) மாலை 04.00 மணிக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

ஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க அ.தி.மு.க. வலியறுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ