Homeசெய்திகள்தமிழ்நாடுமறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

மறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

-

- Advertisement -

மறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது செந்தில் பாலாஜி  வெளியே வரக் கூடாது என்று முடிவு செய்துவிட்டதை போல் நீதிபதி செயல்படுவதாகவும், நீதிபதியின் முடிவு புதிய நடைமுறையாக உள்ளது என்றும் நீதிபதியின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  சாட்சி விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று செந்தில் பாலாஜி  ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்.4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டது. அப்போது, விசாரணையை அக். 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை மறுபடியும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜக தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை – ஆர்.எஸ்.பாரதி 

இவ்வாறு செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் நிரகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ