Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக

we-r-hiring

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி,ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
Photo: AIADMK

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துக்களையும், தேர்தல் அறிக்கையில் தரப்பட வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான  சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ