spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பத்தூரில் பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை!

அம்பத்தூரில் பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை!

-

- Advertisement -

 

we-r-hiring

அம்பத்தூரை ஆட்டிப்படைத்த பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற அஜய் (26). இவர் கடந்தாண்டு செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டாஸ் போடபட்டு கடந்த 1 வருடமாக சிறையில் இருந்தார். பின்னர் கடந்த 22ம் தேதி குண்டாஸ் முடிந்து வெளியே வந்த அஜித் அன்றைய தினமே பைக் ஒன்றை திருடியுள்ளார். அந்த பைக்கை வைத்து அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் பூ வியாபாரம் செய்து விட்டு வீடு திருப்பிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளார். மேலும் கடந்த 4ம் தேதி அம்பத்தூர் ஞானமூர்த்தி காந்தி தெருவில் மற்றொரு பைக்கை திருடிய அஜித் அந்த பைக்கை வைத்து கடந்த 5 மற்றும் 6 தேதிகளில் அம்பத்தூர் ராமாபுரம் சன்தாரியா நகரில் 4 செல்போன்களையும், புதூர் பானு நகரில் 2 செல்போன்களையும் வழிப்பறி செய்துள்ளார். மேலும் கடந்த 8ம் தேதி புதூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள அன்பு நாயகம் தெருவில் செல்போன் ஒன்றையும், 3000 ரூபாய் பணம் இருந்த பர்ஸ் ஒன்றையும் வழிப்பறி செய்துள்ளார்.

இந்நிலையில் தொடர் வழிப்பறி புகார்கள் வந்தததைடுத்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி அறிவுறுத்தலின்படி, அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த அஜித்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில், அவரிடம் இருந்து 8 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குண்டாஸ் முடிந்து வெளியே வந்த அன்றைய தினமே தனது கைவரிசையை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவந்த அஜித் என்கிற அஜய் போலீசார் மீண்டும் ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ