பெண்களை இழிவுப்படுத்தும் திமுக அமைச்சர்கள்- டிடிவி தினகரன் கண்டனம்
தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?
தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.
1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 1, 2023
இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.