Homeசெய்திகள்தமிழ்நாடு‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..

‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..

-

- Advertisement -
கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.... ஆம்புலன்சை மறித்து ரசிகர்கள் கதறல்!

தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ