spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு

-

- Advertisement -

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உலக அரங்கில், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும்.

we-r-hiring

Image

கடந்த 2001 ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துப் பெருமை சேர்த்தவர் தர்மன் தலைமையிலான அரசு, தொடர்ந்து, உலக அரங்கில் சிங்கப்பூரின் பெருமையை நிலைநிறுத்துவதாகவும், இந்தியாவுக்கும், தமிழ் மக்களுக்கும், சிங்கப்பூருக்குமான நெருக்கமான உறவை மேன்மைப்படுத்துவதாகவும் அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ