Homeசெய்திகள்தமிழ்நாடுரத்தக்குழாயில் அடைப்பு- செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி

ரத்தக்குழாயில் அடைப்பு- செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி

-

ரத்தக்குழாயில் அடைப்பு- செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளானர்.

Image

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

senthilbalaji

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 அடைப்புகள் இருப்பதை அடுத்து இதய அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

MUST READ