
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த சுரேஷ் (வயது 50), ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளனர். அப்போது, விஷவாயுத் தாக்கியதில் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்தனர்.
நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சை
இதில் தொழிலாளி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை மீட்ட அம்பத்தூர் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருமுல்லைவாயல் காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபார்ட்மெண்டின் உரிமையாளரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூடு பிடிக்கும் சிங்கப்பூர் சலூன் புரமோசன்ஸ்
கழிவுநீர் தொட்டியில் இறங்கி தொழிலாளி விஷவாயுத் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.