
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரூ.1 லட்சத்திற்கு லியோ டிக்கெட் வாங்கிய ரசிகர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு இன்று (20/10/2023) காலை 09.00 மணிக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும், ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முத்தக்காட்சிக்கு கூடுதல் சம்பள விவகாரம்… ராஷ்மிகா மறுப்பு…
இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், இலட்சுமணன், புகழேந்தி, எழிலரசன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.