Homeசெய்திகள்தமிழ்நாடு"உங்கள் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை"- மத்திய அரசை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!

“உங்கள் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை”- மத்திய அரசை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!

-

 

"உங்கள் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை"- மத்திய அரசை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!

சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய தமிழகத்தில் பா.ஜ.க.வின் பொய் செல்லுபடியாகாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

அடடே மனோகர் மறைவு… திரையுலகினர் இரங்கல்….

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, “மோடி அரசு 10 ஆண்டுகளில் என்னென்ன அறிவித்தார்?,என்னென்ன செய்தார்?, 2013- ஆம் ஆண்டு பா.ஜ.க. மாநாட்டை நடத்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியாக ஒரு அமைச்சகம் அமைப்போம். மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையை எல்லையில் நிறுத்துவோம் என்று உத்திரவாதம் கொடுத்தார்கள். மீனவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படாது, மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். நமது நாட்டின் மீனவர்களை இலங்கை, பாகிஸ்தான் கடற்படை தாக்குவதும், வலைகளை கிழிப்பதும் பெட்ரோல் குண்டுகளால் தாக்குவதுமாக நடைபெறுகிறது. மோடி அரசு மீனவர்களை பாதுகாக்கிறதா? அல்லது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?

ரோகிணி திரையரங்க உரிமையாளருக்கு திருமணம்… திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்…

பா.ஜ.க. ஆட்சி வந்தால் ஒரு உயிர் கூட போகாது. இலங்கை கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர். இன்னும் 2 மூன்று மாதத்தில் மோடி ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறோம். நீங்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறீர்கள். திருட்டும் புரட்டும் முடிவுக்கு வரும் காலம் வெகு விரைவில் நடக்க இருக்கிறது.

பா.ஜ.க. எம்.பி.க்கள் இல்லாத பகுதிகளில் மாற்றான் தாய் மனப்பான்மையாக நடந்துக் கொள்கிறார்கள். மீனவர்களை ராகுல் காந்தி பாதுகாப்பார் என உறுதியாக நம்புகிறோம். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் சேர்த்து வைத்த செல்வங்களை பா.ஜ.க. அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

பால் விலை, பெட்ரோல், எல்.பி.ஜி எரிவாயு விலையை பாதியாக குறைப்பேன் என்றார், என்ன நடந்தது? இந்திய பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு இணையாக உயர்த்துகிறேன் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு மாடல் உள்ளது.

தனுஷ் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி – கமல்?

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஆனால் நீங்கள் அதிபர் மாடல், சீனா மாடல் உங்கள் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை, இஸ்லாமியர்களை விரட்ட நினைக்கிறீர்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் ஏமாற்றலாம், சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய தமிழகத்தில் உங்கள் பொய் செல்லுபடியாகாது. இரண்டாவது சுதந்திரத்திற்கு இந்தியா தயாராக உள்ளது. மே மாதத்திற்கு பிறகு உங்கள் வேலை இங்கு நடக்காது என்றார்.

MUST READ