Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பா.ஜ.க. நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

-

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

சென்னை பனையூரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்ட நிலையில், முறையாக அனுமதி பெறாததால், அதனை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அகற்றினர். அப்போது, பா.ஜ.க.வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கிரேன் கண்ணாடியும் உடைக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
.
ஆயுதபூஜையையொட்டி, பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டியையும், பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!

ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, தி.மு.க.வின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பா.ஜ.க.வினரைப் பழி வாங்கும் தி.மு.க.வின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்”.இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

MUST READ