இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பாய்லர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!
சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆலையில் இன்று (டிச.27) மதியம் 01.00 மணியளவில் பாய்லர் ஒன்று திடீரென வெடித்தது.
பாய்லர் வெடித்தச் சத்தத்தைக் கேட்ட ஊழியர்கள், அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடி வந்தனர். பாய்லர் வெடிதத்தில் பணியில் இருந்த ஊழியர் பெருமாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இரண்டு ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தண்டையார்பேட்டை காவல்துறையினர், பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.