Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை உணவுத்திட்டம் - தெலங்கானா அதிகாரிகள் பார்வை

காலை உணவுத்திட்டம் – தெலங்கானா அதிகாரிகள் பார்வை

-

காலை உணவுத்திட்டம் – தெலங்கானா அதிகாரிகள் பார்வை

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்.

காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
Video Crop Image

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 31,008 அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதனால் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

காலை உணவுத் திட்ட செலவினங்களுக்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உப்புமா, கிச்சடி, சிறுதானிய உணவுகள், வெண்பொங்கல், கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட்டு வருகிறது.

inspection

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 அதிகாரிகள் குழு பார்வையிட்டனர். சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளிக்கு சென்ற அதிகாரிகள், உணவு பரிமாறப்படுவதை பார்வையிட்டனர். உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை குறித்து அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.

MUST READ