2023 – 24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


தமிழகத்தின் அமைச்சரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2023 – 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும் என்றார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் யார் எங்கு அமர வேண்டும் என்பது என் அதிகாரத்திற்குட்பட்டது. அதுகுறித்து ஏற்கனவே அறிவித்துவிட்டோம். வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.


