திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை தனியார கல்லுரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்
ராமஞ்சேரி என்ற இடத்தில் சென்றபோது கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.