Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!

-

 

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
File Photo

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 5,869 கனஅடியில் இருந்து 12,536 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் குடகு உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 29,552 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், அதேபோல், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,749 கனஅடியாக உள்ளது.

நான்கு முறை சம்மன்- ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்!

இந்த நிலையில், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,536 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் எனவும், நாளை காலைக்குள் மேட்டூர் அணைக்கு வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ