
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சுமார் நான்கு முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், இதய்நோய் காரணமாக, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார். எனவே, அசோக்குமார் நேரில் ஆஜராகுவதற்கு மேலும் 4 வாரங்கள் அவகாசத்தை அவரது வழக்கறிஞர்கள் அமலாக்கத்துறையினரிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலையில் நடந்துச் சென்ற இளைஞரிடம் 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி!
எனினும், அமலாக்கத்துறையின் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க விரைவில் அசோக்குமார், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.