Homeசெய்திகள்தமிழ்நாடு"சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை முள்கள்"- கி.வீரமணி குற்றச்சாட்டு!

“சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை முள்கள்”- கி.வீரமணி குற்றச்சாட்டு!

-

 

"சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை முள்கள்"- கி.வீரமணி குற்றச்சாட்டு!

பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திரிசூலத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறார். ஒரு முள் சி.பி.ஐ., மற்றொரு முள் வருமான வரித்துறை, மற்றொன்று அமலாக்கத்துறை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “நாமெல்லாம் தேர்தலை பத்திரமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இவர்கள் தேர்தலுக்காகவே பத்திரத்தைக் கொண்டு வந்து மோசடி செய்தவர்கள். பா.ஜ.க.வினர் ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்திக் கொண்டு ஊழலிலேயே மெகா மகா ஊழல் மற்றும் இமாலயா ஊழல் செய்து வருகிறார்கள் மக்களே இதைநீங்கள் எண்ணி பாருங்கள்.

தமிழ்நாட்டில் ரோடு ஷோ எங்கே நடத்தினார்கள்.என்று தெரியுமா? தியாகராயநகர் 100 வருடத்திற்கு முன்பே நீதிக்கட்சி தொடங்கிய போது தியாகராயர் என பனகல் பூங்கா, பனகல் யார் (அன்றைக்கு ஒப்பற்ற பிரதமராக பனகல் விளங்கினார். பிரதமர் என்கிற பதவியானது அன்று முதல்வர் பதவிக்கு சமமானது) நீங்கள் அந்த வழியாக சென்றீர்களே, அதனால் தான் ரோடு ஷோ பிரமாதமாக இருந்தது. அனைத்து கடையும் மூடிவிட்டீர்கள். வியாபாரிகள் கலந்து கொள்ளக்கூடாது. பொதுமக்கள் யாராவது புதிதாக வேடிக்கை பார்த்தால் அவர்களுக்கும் அடையாளம் கொடுத்தீர்கள்.அவர்கள் தான் பிரதமருடன் நடந்தார்கள்.

அதுதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி இந்த படத்தை பாருங்கள். பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ரோடு ஷோ பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உத்திரபிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தின் திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கரோனா நேரத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி போவதற்கு இந்த ஆட்சி எந்த விதமான வசதியும் செய்து கொடுக்கவில்லை. ரயில் ஏற்பாடு செய்தார்களா.வந்தே பாரத் என்கிறீர்களே. இந்த ரயில் அந்த ரயில் என்கிறீர்களே.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?

அந்த தொழிலாளிக்கு எந்த உதவியும் செய்யவில்லையே. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அம்மையார் அவர்கள். அந்த காங்கிரஸ் கட்சி செலவை ஏற்கும் என்றார். காங்கிரஸ் செலவு செய்தாலும் அதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய வஞ்ச நெஞ்சம் கொண்டவர் பா.ஜ.க.வின் பிரதமர்.

பா.ஜ.க.வின் மிக பிரம்மாண்டமான 2 தொழிற்சாலைகள் இன்று இந்தியாவில் இயங்கி வருகிறது. ஒன்று பொய்யான தகவல்களை பரப்புவது, மற்றொன்று வாஷிங் மெஷின் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஒரு கூர்மையான ஆயுதத்தை அவர் பயன்படுத்தி வருகிறார். அதற்கு பெயர் திரிசூலம். ஒரு முள் சி.பி.ஐ., மற்றொரு முள் வருமான வரித்துறை இன்னொரு முள் அமலாக்கத்துறை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ