தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் 14 செ.மீருக்கும் கலய நல்லூரில் 13 செ.மீருக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது எனவும் ராசிபுரம், நாமக்கல், சிதம்பரம் அண்ணாமலை நகர், திருவையாறு, புள்ளம்பாடி, தியாகதுருகத்தில் 12 செ.மீ மழையும் மேட்டூர், ராமேஸ்வரம், மணலூர்ப்பேட்டை, கல்லக்குடி, லால்பேட்டை, வேப்பூர், சூளாங்குறிச்சியில் தலா 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் 9 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுளளது. விழுப்புரம் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பனையூரில் சகாயம் ஐ.ஏ.எஸ்.! விஜய்க்கு கொடுக்கப்பட்ட சர்வே! ரகசியத்தை வெளியிட்ட நக்கீரன்!
