Homeசெய்திகள்தமிழ்நாடு17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் வெள்ளோட்டம்!

17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் வெள்ளோட்டம்!

-

- Advertisement -

 

17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர் வெள்ளோட்டம்!

சிவகங்கை மாவட்டம், கண்டதேவியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

தேவக்கோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் தேர், கடந்த 2016- ஆம் ஆண்டு பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முயன்ற போது, அதனை வடம் பிடித்து இழுத்ததில் இரு சமூக மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டது.

தேரோட்டத்தை நடத்தக்கோரி, கடந்த 2019- ஆம் ஆண்டு மஹா தேவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி துணை ராணுவத்தைக் கொண்டு தேரோட்டத்தை நடத்த செய்யவா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, கண்டதேவியில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பதிலளித்தது. அதன்படி, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சுமார் 1.5 கி.மீ. தூரம் நடைபெற்ற தேர் வெள்ளோட்டத்தைக் காண அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

MUST READ