spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇயக்குனர் மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..

இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..

-

- Advertisement -

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக இயக்குனர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். முதன்மை அமர்வு முன்பு அவர் தாக்கல் செய்த மனுவில், அமரர் கல்கியினுடைய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, அதே பெயரில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து கூறியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை திரித்துக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Ponniyin Selvan - PS

we-r-hiring

வரலாற்று அடிப்படையில் படம் எடுக்கும் போது உரிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றும், வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களையே கல்கியும் பயன்படுத்தி இருக்கும் நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வரையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து இயக்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

Chennai HC

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரை பார்த்து நீதிபதிகள் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பொனர். அதற்கு மனுதாரர் தரப்பில் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது. நாவலை படிக்காத நிலையில் வரலாற்றை திரித்து இருப்பதாக எப்படி கூற முடியும் என்றும், பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பணம் இல்லை, நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

MUST READ