

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பா.ஜ.க. நிர்வாகிகளை அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு வரை, கனமழையும், காற்றும் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும், தங்கள் பணிகள் அனைத்தையும் ஒரு நாள் ஒத்தி வைத்து, பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தமிழக பா.ஜ.க. சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க. சகோதரர்களும், நிர்வாகிகளும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், சென்னை வரும் ரயில்கள், மழை காரணமாக, புறநகர் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ரயில் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் இயன்ற வரையில் செய்து தர பா.ஜ.க.
சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்ஜம் புயல், அதி கன மழை… குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!
பொதுமக்கள் அனைவரும் இந்தக் கடினமான நேரத்தில் மிகக் கவனத்துடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


