spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்... விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!

மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!

-

- Advertisement -

மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்... விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!சென்னை மற்றும் புறநகர் பகுதியை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் தேங்கியும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இன்று இரவு வரை அதிகன மழை நீடிக்கும் என்பதால் மீட்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதியான மாங்காடு, பழவேற்காடு ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களால் வெளியே வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்பு குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்... விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் உணவு ஆகிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பள்ளிக்கரணை போன்ற புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து அபார்ட்மெண்டின் வெளியில் நடத்தப்பட்டு வைத்திருந்த பல கார்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கோயம்பேடு முதல் வட பழனி செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. மழைநீர் கழிவு நீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி சுகாதாரமற்ற சூழலும் நிலவி வருகிறது. தொடர்ந்து புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும்வரை தேவையின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

MUST READ