
சென்னை 160 இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வேலைக்கு செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியில் இருந்து 258 கனஅடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இரவு முழுவதும் பெய்த மழையால் 12 கனஅடி அதிகரித்துள்ளது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
சென்னையில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சென்னையில் ஜமீன் கொரட்டூரில் 8.4 செ.மீ., பூந்தமல்லியில் 7.4 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 14 செ.மீ, தரமணி 12 செ.மீ., செம்பரம்பாக்கம் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று (ஜூன் 18) இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.