spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் கனமழை- சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் கனமழை- சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

-

- Advertisement -

 

சென்னையில் கனமழை- சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!
Video Crop Image

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

we-r-hiring

போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

அதேபோல், ஜி.எஸ்.டி. சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்ற காட்சியை நம்மால் காண முடிந்தது.

ஆவடி மாமன்ற வார்டு உறுப்பினர்கள் வேதனை

தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்டப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்தூர், ஈ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

MUST READ