சரமாரியாக கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள்-விரைவில் குறைகளை தீர்க்க ஆணையருக்கு மேயர் பரிந்துரை
எனது வார்டில் 10 நிமிடம் இரவு நேரத்தில் வந்து நின்று பாருங்கள் பத்தாயிரம் கொசு உங்கள் தலையின் மீது சுற்றும்– ஆவடி மாமன்ற 1ஆவது வார்டு உறுப்பினர் வேதனை.

ஆவடி மாநகராட்சியில் மாதாந்தோறும் நடக்கும் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரிய குமார், ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மற்றும் துணை ஆணையர், பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி, அரசு எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி கலந்துரையாடினர்.
இதில் மன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். இதில் 21 வது வார்டு உறுப்பினர் வீரபாண்டியன் தங்கள் வார்டில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாகவும், மெட்ரோ வாட்டர் அமைக்க பள்ளம் எடுக்கப்பட்டது இந்த பள்ளங்கள் மூடப்படாததால் இதில் பொதுமக்கள் விழும் பாதிப்பு உள்ளது எனவே இதனை சீர் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய 37 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் தனது வார்டில் சாலைகள் சீர் இல்லாமலும் மேலும் 13 முறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் மின்விளக்குகள் பராமரிக்காமலும், புதிதாக அமைத்துக் கொடுக்காமல் இருப்பதாகவும் இதனை சீர் செய்து தர வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார், தொடர்ந்து 48 வது வார்டு உறுப்பினர் கார்த்திக் தனது வார்டில் சாலைகள் குன்றும் குழியுமாக உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் தயவுசெய்து சாலைகளை சீரமைக்க தற்போது மழைக்காலத்தில் சாலை அமைக்க முடியாத காரணத்தினால் 10 லோடு ரப்பிஸ் கொண்டு சாலைகளை சீரமைக்க ஆணையரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
மேலும் எனது வார்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வரி விதிக்க தயாராக இருந்தும் அதனை ஏற்கமால் கால தாமதம் ஏற்படுத்தி வருவதற்கான காரணம் தெரியவில்லை மாநகராட்சி நிர்வாகம் வரிகளை ஏற்று மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டி தருவதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுகோள் விடுகிறேன்..இதனைத் தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
இதில் ஆவடி மாநகராட்சியில் மாடுகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், சாலையில் மாடுகள் திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாகும், மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர், மேலும் 1ஆவது வார்டு உறுப்பினர் பிரகாஷ் பேசுகையில் எனது வார்டில் பத்து நிமிடம் இரவு நேரங்களில் வந்து நின்றால் பத்தாயிரம் கொசு உங்கள் தலையின் மீது சுற்றிக் கொண்டிருக்கும் என்று வேதனை தெரிவித்தார்,மேலும் கொசுக்களை கட்டுப்படுத்த மருந்தை தெளிக்கவும் கொசு மருந்து புகை அடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதற்கு பதில் அளித்த ஆணையர் விரைவில் மாநகராட்சியில் உள்ள குறைகளை துரிதமாக நடவடிக்கை எடுத்து சீர்செய்வோம். இனிவரும் காலங்களில் மாநகராட்சி அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்கின்றனர் எப்படி செயல்படுகின்றனர் என்பதை கணக்கிட்டு பட்டியலாக இனிவரும் காலங்களில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டம் நிறைவடைந்தது.