சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினர்.

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூர் மாமன்ற உறுப்பினர் நாகவல்லி ஏற்பாட்டில் ஏழை எளியோருக்கு 16 வகையான அரிசி பருப்பு வெல்லம் முந்திரி திராட்சை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை 1800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இணைந்து வழங்கினர். இதனைத் தொடர்ந்து கொரட்டூர் சுவாதி பேலஸ் திருமண மண்டபத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட கட்சி பாக முகவர்களுக்கு 16 வகையான பொங்கல் தொகுப்புகள் வேட்டி சட்டை புடவை போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே தான் போட்டி இருக்கும் சாதாரணமானவர்களுக்கு இல்லை என கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடும் போட்டி இருக்கும். பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் 70% முதல் 80 சதவீதம் வரை ஓட்டு பெற முடியும் என கூறினார். மாவட்ட செயலாளர் சேகர் பாபுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தை முதல் நாளை புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் காரணம் என பெருமிதம் கொண்டார். அமைச்சர் சேகர்பாபு கட்சிக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி செயல்படுவார். இந்தியாவிலேயே சிறந்த அமைச்சர்கள் கொண்டு செயல்படும் கட்சி திமுக தான் என்று பெருமிதம் கொள்வோம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு. இந்த பொங்கல் தைத்திருநாளில் வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் தலைமை அண்ணன் டி ஆர் பாலு அவர்களை தேர்ந்தெடுத்தால் நமது கட்சி நிர்வாகிகளும் கழகப்பொறுப்பாளர்களும், களப்பணியாற்றி மேலும் பொதுமக்களும் வருகிற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த பொங்கல் நன்னாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் 3000 திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.