- Advertisement -
அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் வழக்கை தாக்கல் செய்தார். முதலமைச்சருக்கு எதிராக அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் பொய், முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை 8 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அந்த பட்டியலில் திமுக அமைச்சர்கள் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டது. திமுகவினரின் கறுப்பு பணம், பினாமி சொத்துகள் பகுதி – 2 ல் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.