Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று பிற்பகல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். பலர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு மரணமடைந்தோர் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதாவது உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டார்.

we-r-hiring

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற இன்று பிற்பகல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார். அதேபோல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

MUST READ