ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் கருதப்படுகிது. இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் அத்திக்கடவு .- அவினாசி திட்டத்தின் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படுவதால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவம். மேலும் 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்