
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்து வருகின்றது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கட்சியை வலுப்படுத்துவது, பரப்புரை, பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவது என திவீரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில் ஆளும் கட்சியான திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிர்வாகிகளை ஒன் – டூ – ஒன் சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் இன்றைய தினம் சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு மண்டல பொறுப்பாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியும் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நெல்லை தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் பதவிகள் பறிக்கப்படும் என அனைவருக்கும் நேரடி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
